இலங்கையில் தமிழ் புறக்கணிப்பு - ராமதாஸ் கண்டனம்
இலங்கை விடுதலை நாள் விழாவில் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்ற அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடுதலை நாள் விழாவில் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்ற அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள அவர் உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது எனவும் குற்றம்சாட்டி உள்ளார். ஐ.நா. சபையின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழம் அமைத்துத் தர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வர வேண்டும் என்றும், அறிக்கையொன்றில் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.