நார்மாண்டி தரையிறக்கத்தின் 75-வது ஆண்டு நினைவு தினம் : இங்கிலாந்து விமானப் படையின் கண்கவர் சாகசம்
இங்கிலாந்து நாட்டின் போர்ஸ்மோத் கடற்கரை நகரில் நடைபெற்று வரும் நார்மாண்டி படையிறக்கத்தின் 75-வது ஆண்டு நினைவு கொண்டாட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு 1944ஆம் ஆண்டு ஜூன் 6 தேதி தொடங்கியது. பிரான்ஸின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இந்த படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்படையெடுப்பின் முதல் நடவடிக்கையான பிரான்சு கடற்கரையில் படைகளைக் கரையிறக்கும் நடவடிக்கைக்கு நெப்டியூன் நடவடிக்கை (Operation Neptune) என்று பெயரிடப்பட்டிருந்தது. இதுவே நார்மாண்டிப் படையிறக்கம் என அழைக்கப்படுகிறது. யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட் என 5 கடற்கரைகளிலும் ஜூன் 6 இரவுக்குள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் படையினர் தரையிறங்கினர். இதன் 75-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.