4 ஆயிரம் இந்து மற்றும் புத்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை : ரூ.40 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய டாக்டர்

இலங்கையில் 4 ஆயிரம் இந்து மற்றும் புத்த மத பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்த டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-29 18:54 GMT
இலங்கை திரிகோணமலையில் உள்ள கருணாகல் பயிற்சி மருத்துவமனையில், சிசேரியன் முறையில் குழந்தைகளை பெற்ற 4 ஆயிரம் இந்து மற்றும் புத்த மத பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை ஆபரேஷன் செய்ததாக டாக்டர் சியாபுதீன் முஹம்மது சபி என்பவர் மீது புகார் எழுந்தது. குறிப்பாக, அரபு நாட்டு செல்வந்தர்களின் கைக்கூலியாக செயல்பட்டு, இந்து மற்றும் புத்த மத பெண்களுக்கு அடுத்த குழந்தை பிறக்காமல் தடுப்பதற்காக, இதுபோல, சிசேரியன் பிரசவ மயக்க நிலையில் இருக்கும்போது கருத்தடை ஆபரேஷன் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 
இதன் மூலம், 40 கோடி ரூபாய் அளவுக்கு சியாபுதீன் முஹம்மது சபிக்கு சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 24-ம் தேதியன்று  சியாபுதீன் முஹம்மது சபி-யை இலங்கை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை அந்நாட்டின் சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களில் சுமார் 150 பெண்கள், சியாபுதீன் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை அமைத்து இலங்கை சுகாதார அமைச்சர் ரஜிதா சேனரத்னே உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிசேரியன் ஆபரேஷன் நடக்கும்போது தலைமை அறுவை சிகிச்சை நிபுணருடன் மூன்று துணை மருத்துவர்களும் மயக்க மருந்து  நிபுணர் மற்றும் நர்சுகளும் இருப்பார்கள் என்பதால் இது குறித்து விரிவான விசாரிக்க வேண்டி உள்ளதாக கூறினார். கைதான டாக்டர் சியாபுதீன், கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு மேல் மாகாணத்தில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்