ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்கள் 70 பேர் கைது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தகவல்

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில், ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-26 08:33 GMT
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு விவகாரத்தில், ஐ.எஸ். அமைப்பு ஆதரவாளர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 130 முதல் 140 பேர், இலங்கையில் பதுங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். இதனிடையே, கிளிநொச்சி சந்தையில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் சுற்றி திரிவதாக புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த இலங்கை ராணுவம், 6 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சிலர், ஐ எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும்,  தீவிரவாத தேடுதல் வேட்டை, சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்