இந்தியா தாக்குதல் நடத்தும் - பாகிஸ்தான் அச்சம்

இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று, பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது.

Update: 2019-04-08 03:54 GMT
இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று, பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது. முல்தான் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்முத் குரேஷி, இதுகுறித்து, நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது என்றும் ஏப்ரல் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் தாக்குதல் நடக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த புகாரை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மீது தாக்குதல் நடத்துமாறு பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தூண்டி விடுவது போல, மெக்முத் குரேஷியின் பேச்சு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்