"ஹெச்-1 பி விசா விதிமுறைகள் எளிமையாக்கப்படும்" - டிரம்ப் உறுதி
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி விசா குறித்த விதிமுறைகளை எளிமையாக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி விசா குறித்த விதிமுறைகளை எளிமையாக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி நுழைவு விசா குறித்த விதிமுறைகளை எளிமையாக்குவதாகவும், அந்த விசாவில் வருபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் வழங்கப்பட்ட 4 லட்சத்து 20 ஆயிரம் விசாக்களில் 3 லட்சத்து 10 ஆயிரம் விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.