மும்பை தாக்குதல் : துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் - ரூ 35 கோடி பரிசு என அமெரிக்கா அறிவிப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 35 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

Update: 2018-11-26 11:25 GMT
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில் பலியான 166 பேரில், ஆறு பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தநிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் போம்பியோ, மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தும் என்று தெரிவித்துள்ள மைக்கேல், தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 35 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்