நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில், டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அவர் மீதான இரண்டு குற்ற வழக்குகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. ஆபாச பட நடிகைக்கு தமது நிறுவன பணத்தை சட்ட விரோதமாக அளித்த குற்ற வழக்கு விசாரணை, விரைவில் தொடங்க உள்ளது. நியூயார்க் மாவட்ட நீதிமன்றம் இதற்கான தேதியை அறிவிக்க உள்ளது. டிரம்ப் மீதான நிதி மோசடி வழக்கில், சுமார் 45 கோடி டாலர் உறுதி தொகையை கட்ட முடியாத நிலையில் டிரம்ப் உள்ளதால், அவரின் சொத்துகளை பறிமுதல் செய்யப் போவதாக நியூயார்க் அட்டார்னி ஜெனரல் அறிவித்துள்ளார். அவரின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டால், டிரம்ப்பிற்கு நிதி நெருக்கடி வெகுவாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.