இப்படி கூட சாவு வருமா? - மாணவி உயிரை பறித்த வேர்க்கடலை சாஸ்.. அதிர்ச்சியில் உலகம்

Update: 2024-11-28 08:12 GMT

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் வேர்க்கடலை Sauce சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸில் 23 வயது கல்லூரி மாணவி ஆலிசன், வழக்கம் போல் தான் செல்லும் உணவகத்திற்கு சென்று வழக்கமாக தான் வாங்கும் உணவை ஆர்டர் செய்துள்ளார்... வேர்க்கடலையில் அவருக்கு அலர்ஜி உள்ள நிலையில், ஆலிசன் ஆர்டர் செய்த உணவின் ரெசிபி மாற்றப்பட்டு, உடன் வேர்க்கடலை Sauce பரிமாறப்பட்டதை அறியாமல் அதை சாப்பிட்டுள்ளார்... அதனால் அலர்ஜியாகி ஆலிசன் பரிதாபமாக உயிரிழந்தார். உணவகம் திடீரென ரெசிபியை மாற்றியதால் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்