"வழக்கம்போல் விலாகிங்.." - சுகாதாரத்துறை அறிவுறுத்தியும் வீடியோ வெளியிடாத இர்பான் - சர்ச்சை

Update: 2024-05-31 02:18 GMT

மனைவியின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் ஆர்வமிகுதியில், மனைவியை துபாய் அழைத்துச் சென்ற இர்பான், சிசுவின் பாலினத்தை அறிந்து அதை வீடியோவாக வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், இர்பான் சட்ட விதிகளை மீறி இருப்பதாக தமிழக அரசு குறிப்பாணையும் வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட இர்பான், சிசு கலைப்பு குறித்தான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன் யூடியூப் பக்கத்தில் வெளியிடுவதாக உறுதியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாட்கள் பல கடந்தும் சிசுக் கலைப்பு குறித்தான விழிப்புணர்வு வீடியோ வெளியிடாமல், வழக்கம்போல் தனது விலாகிங் வீடியோக்களை இர்பான் வெளியிட்டு வருவதும் பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.\

Tags:    

மேலும் செய்திகள்