கதவை தாழிடாமல் தூங்கிய இளைஞர்கள்...செல்போன்களை எடுத்து கொண்டு பறந்த மர்ம நபர்

Update: 2023-08-08 14:25 GMT

கோவை மாவட்டம் சூலூர் அருகே இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் அதிகாலையில் புகுந்த மர்ம நபர், செல்போன்கள் மற்றும் ஹெல்மெட்டை திருடிச் சென்றுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பிரகாஷ், விகாஸ், ராகவன் ஆகியோர் தென்னம்பாளையத்தில் அறை வாடகை எடுத்து, தங்கியுள்ளனர். 3 பேரும் அறையை தாழிடாமல் தூங்கிய நிலையில், அதிகாலையில் வாக்கிங் செல்வதுபோல், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மர்ம நபர், செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்