உருண்டு விழுந்த கற்கள்.. காதை கிழித்த சத்தம் - ஏற்காட்டில் நடந்த அதிர்ச்சி
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக
ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் லேசான மண் சரிவு
ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்காடு குப்பனூர் சாலையில் மேலும் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் ஆங்காங்கே கற்கள் உருண்டு விழுந்து கிடக்கின்றன. இதே போல சேலம் ஏற்காடு மலை பாதையிலும் ஆங்காங்கே சிறு பாறைகள் விழுந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் மழைநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சாலைகளில் மழைநீர் உருண்டொடுகிறது.