16 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சரா?..வழக்கில் எடியூரப்பா கொடுத்த வாக்குமூலம்

Update: 2024-06-18 07:43 GMT

16 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சரா?..வழக்கில் எடியூரப்பா கொடுத்த வாக்குமூலம் - எந்த இடம், என்ன சாப்பாடு? காரணம்?

போக்சோ வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம், சி.ஐ.டி போலீசார் 20க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி, சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். பெங்களூருவில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயார், சதாசிவ நகர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார்.சி.ஐ.டி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில், சி.ஐ.டி போலீசார் முன்பு எடியூரப்பா ஆஜரானாார். அவரிடம், 20-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகார் அளித்த சிறுமியும், அவரது தாயாரும் என்ன காரணத்திற்காக சந்திக்க வந்தார்கள்? எவ்வளவு நேரம் வீட்டில் இருந்தார்கள்? ஏதேனும் சாப்பிட கொடுக்கப்பட்டதா? வீட்டில் எந்தப் பகுதியில் அவர்கள் அமர வைக்கப்பட்டனர்?இதற்கு முன்னர் அந்த சிறுமியோ அல்லது அவரது தாயாரோ சந்தித்துள்ளார்களா? என்பது உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்ட சி.ஐ.டி. போலீசார், அதை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணைக்குப்பின் எடியூரப்பா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என சி.ஐ.டி தரப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்