தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சி? - நீதிபதி அதிரடி கேள்வி

Update: 2023-11-09 10:44 GMT

மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும்போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.பா.ம.கவின் கொள்கை குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி பிரச்சாரம் நடத்த ராணிப்பேட்டை காவல் துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து, ராணிப்பேட்டை மாவட்ட பா.ம.க செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? என்றும், ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். யாருக்காக காவல் துறையினர் உள்ளனர்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும் போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஒருவேளை யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால், டிஎஸ்பி நேரில் ஆஜராக சொல்லி விளக்கம் கேட்கப்படும் என்று கூறி, விசாரணையை 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்