கேரள மாநிலம் வயநாட்டில் சடலங்களை தேடும் பணியின்போது, நான்கு லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. சூரல்மலை பகுதியில் உள்ள வெள்ளார்மலை பள்ளியின் பின்புறம் சடலங்களை தேடும் பணி நடைபெற்றது. அப்போது ஆற்றில் உள்ள பாறை இடுக்கில் இருந்து 4 லட்சம் ரூபாய் பணத்தை தீயணைப்புத்துறையினர் கைப்பற்றினர். பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த அந்த பணமானது, வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.