நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 11 பேரை பறிகொடுத்த இளைஞர்.. மனதை உலுக்கும் கண்ணீர் மல்க பேட்டி
வயநாடு முண்டகை பகுதியில் நிலச்சரிவில் வீடு மொத்தமும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மாயமாகினர். அவர்களில் 5 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், 6 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். உடல்கள் கிடைக்காதா என்று குடும்பத்தாரை இழந்த ரிங்சன் என்ற இளைஞர் கண்ணீருடன் காத்திருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடு இருந்த இடம் முதல் அடிவாரம் வரை முழுவதும் தேடியும் உடல்கள் கிடைக்காததால், ரிங்சனுக்கு ராணுவத்தினர் ஆறுதல் கூறினர்.