வயநாடு கோரம் போல் இனி கூடாது... தமிழ்நாட்டில் இங்கெல்லாம் சுரங்கம்.. அணைகள், தொழிற்சாலைக்கு தடை
மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிப்பது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி கேரளாவில் 9 ஆயிரத்து 993 சதுர கிலோ மீட்டர், தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 914 சதுர கிலோ மீட்டர் உட்பட, மொத்தம் 59 ஆயிரத்து 940 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, திண்டுக்கல், நீலகிரி, குமரி, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 135 கிராமங்கள் மற்றும் காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில், சுரங்கங்கள் தோண்டுவது, அணைகள் கட்டுவது, அனல் மின்சார உற்பத்திப் பணிகளை மேற்கொள்வது, அபாயகரமான கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை அமைக்கவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், மாநிலங்களுடன் இணைந்து ஒரு கண்காணிப்பு மையமும் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.