ஆவியூர் கல்குவாரி பணிகளை நிறுத்தி வைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்..
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரியில், கடந்த 1-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக குவாரி பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது விதிகளை மீறி குவாரி இயங்கி வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், கல்குவாரி பணிகளை நிறுத்தி வைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரி உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பதோடு, உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்..