மாணவிக்கு முத்தம் கொடுத்த ஹெச்.எம். - டிரஸ்ஸை அவுத்து ஓடவிட்ட உறவினர்கள்..

Update: 2024-08-08 08:05 GMT

மாணவிக்கு முத்தம் கொடுத்த ஹெச்.எம். - டிரஸ்ஸை அவுத்து ஓடவிட்ட உறவினர்கள்.. கடைசியில் வந்து குண்டை போட்ட மாணவி - இந்த ட்விஸ்ட் சினிமால கூட இருக்காது

கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலானதால் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரை உறவினர்கள் விரட்டி சென்று தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருத்தாச்சலம் அருகே எறுமனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எலியட் பெட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை தலைமை ஆசிரியர் முத்தமிட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. தற்போது அந்த மாணவி கல்லூரியில் படித்து வரும் நிலையில், ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியரை விரட்டினர். அவர் சுவர் ஏறிக்குதித்து ஓடியநிலையில் விடாமல் துரத்தி சென்ற அவர்கள் தலைமை ஆசிரியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவருடைய ஆடைகள் கிழிந்தநிலையில், அரை நிர்வாணமாக அழைத்து வரப்பட்டதை பார்த்த போலீசார் தலைமை ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி, நானும் தலைமை ஆசிரியரும் காதலித்து வருவதாகவும்... நீங்கள் ஏன் சாலை மறியலில் ஈடுபடுகிறீர்கள்.... என கேட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை திட்டி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்