தமிழில் அர்ச்சனை செய்ய சொன்னதற்கு இழிவாகப் பேசிய அர்ச்சகர்.. - கடலூரில் அதிர்ச்சி
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யக்கோரி சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோயிலில் அர்ச்சகராக உள்ள தினேஷிடம் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறிய போது, சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்வேன் என இழிவாக பேசியதாக முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகி ராமையா புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, அர்ச்சகர் தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழில் அர்ச்சனை செய்யக் கோரியும் கோயில் வளாகத்தில் போலீசாருடன் ராமையா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...