மக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட சுங்கச்சாவடி -திண்டிவனம் அருகே பரபரப்பு

Update: 2024-09-13 15:53 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலையில் நங்கிலிகொண்டன் சுங்கசாவடி இன்று முதல் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

அந்த சுங்கச்சாவடி அருகில் உள்ள ஊரணிதாங்கல், காந்திநகர், வட வடவானுர்,சேர்விளாகம் உள்ளிட்ட கிராம மக்கள், தங்களது கார் உள்ளிட்டவை அவசர தேவைக்கு அடிக்கடி சென்று வருவதற்கு, சுங்க கட்டணம் இல்லாமல் இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து, பல போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் இந்த போராட்டத்தை மீறி இன்று முதல் சுங்க சாவடி திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்