விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு - அதிர்ச்சியில் பக்தர்கள்

Update: 2024-03-20 07:01 GMT

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு - அதிர்ச்சியில் பக்தர்கள்

விழுப்புரம் மேல்பாதி கிராமம் திரவுபதி அம்மன் கோவிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திரவுபதி அம்மன் கோயில் மூடப்பட்டது. இதற்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கோயிலை திறக்க வேண்டும் என மனுதாரர் தரப்பிலும், கோயில் திறக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். பூசாரியை தவிர எவருக்கும் கோயிலுக்குள் அனுமதி இல்லை என கட்டுப்பாடு விதித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்