புதிய குடியிருப்பு வீட்டை பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பரபரப்பு

Update: 2024-09-21 06:50 GMT

சென்னை மூலகொத்தாளத்தில் குடிநீர், மின்சார வசதி இல்லாத குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளதாக கூறி பொதுமக்கள் நள்ளிரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்து வந்தவர்கள், மூலகொத்தாளம் ராமதாஸ் நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

பீரோ, கட்டில் என வீட்டு உபயோக பொருட்களுடன் வந்த அவர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மின்சாரம், குடிநீர் வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வசதிகளும் இருப்பதாக கூறி தங்களை அழைத்து வந்ததாக கூறிய அவர்கள், அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் கூறினார்கள்.

இரவில் அங்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதிஅளித்ததை குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்