ஆபீஸ்லயே இவ்வளவா? அப்போ வீட்டுல? ரெய்டை வீட்டு பக்கம் திருப்பிய விஜிலென்ஸ்க்கு பல அதிர்ச்சிகள்

Update: 2024-05-22 03:07 GMT

விழுப்புரம் இணை சார்பதிவாளர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின. விழுப்புரம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, லஞ்ச புகாருக்கு உள்ளான பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் தையல்நாயகிக்கு சொந்தமான நெய்வேலி அருகே வடக்குத்து கிராமத்தில் உள்ள வீட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகை, தங்க பத்திர முதலீட்டுக்கான ஆவணங்கள் மற்றும் 17 இடங்களில் நிலம் வாங்கியதற்கான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது. வருமானத்து அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்