"என் மகன் ஆத்மா சாந்தி அடையும்" - கனத்த குரலில் பேசி உறுதி மொழி எடுத்த சைதை துரைசாமி
இமாச்சலில் கடந்த 4ஆம் தேதி சட்லஜ் நதியில் கார் விபத்துக்குள்ளானதில், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயமானர். இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 8 நாட்களுக்கு பின் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ராஜகீழ்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, வெற்றி துரைசாமியின் உடலுக்கு, நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து அஜித் ஆறுதல் கூறினார்....