தலைமை ஆசிரியர் செய்த வேலை.. வீடியோவோடு புகார் கொடுத்த நபர்

Update: 2024-09-20 07:46 GMT

வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த‌தாக தலைமையாசிரியர் மீது வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூரை சேர்ந்தவர் கிருபானந்தம். இவர், தனது தம்பிக்கு வேலை வாங்கித் தருவதாக எபிநேசர் என்ற தலைமை ஆசிரியர் ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறை நேரில் கேட்கும் போதும், சீல் போட்டு, ஆர்டர் ரெடியா இருக்கிறது என்றும், பல லட்சங்கள் கொடுத்து வேலை வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள் என்றும் பேசியவற்றை வீடியோ பதிவு செய்து கிருபானந்தம் வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில், எழுதிக்கொடுத்து கடனாக பணம் பெற்றதாகவும், விரைவில் கொடுத்துவிடுவதாகவும் புகாருக்குள்ளான தலைமை ஆசிரியர் எபிநேசர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்