`ட்ரெக்கிங்' போக தெம்பு இருந்தா தான் இந்த ஸ்கூலுக்கு போக முடியும் போல.. பதைபதைக்க வைக்கும் காட்சி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஜார்த்தான் கொல்லை மலை கிராமத்திற்கு செல்லும் பாதையில் 9 இடங்களில் காட்டாறு குறுக்கிடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஜார்த்தான் கொல்லையில் 2 அரசு பள்ளிகளில் இயங்கி வரும் நிலையில், தினமும் தண்ணீரில் தத்தளித்தே பள்ளிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சாலை அமைக்கும் பணியும் ஆமை வேகத்தில் நடப்பதால் நடந்து செல்லவே சிரமமாக உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.