வெளுத்து வாங்கிய கனமழை.. - தனி தீவாக மாறிய காட்பாடி.. - தவிக்கும் மக்கள்..
வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக வேலூர் காட்பாடி காந்தி நகர் அருகே உள்ள தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது... விஜி ராவ் நகர், பாரதி நகர், உள்ளிட்ட இடங்களில் பல தெருக்களில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து விஐடி செல்லும் சாலையில் வெள்ளநீர் ஓடியது. அதனால் கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன... 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.