பட்டப்பகலில் பெண் கழுத்தில் கத்தி...அலறிய மக்கள் - தலைதெறிக்க ஓடும் வெறி பிடித்த இளைஞர்
வேலூரில் குடிபோதையில் கத்தியுடன் வீதியில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பனந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜாபீர், இம்தியாஸ் ஆகியோர் மதுபோதையில் ரூஷானா என்பவரது வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ஜாபீர் அருகில் இருந்த இறைச்சி கடையில் இருந்து கத்தியை எடுத்து ரூஷானா கழுத்தில் வைத்து மிரட்டியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் ரகளையில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.