"மாநில தலைவர் நானு.. புரியுதா.." - பஸ்ஸில் வாயை மூடாமல் அலப்பறை - தம்கட்டி ரிப்ளை கொடுத்த கண்டக்டர்
வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில், மது போதையில் இருந்த இருவர் பேருந்தின் சீட்டில் படுத்து உருண்டபடி பயணம் செய்தனர். நடத்துநர் டிக்கெட் எடுக்கும்படி கேட்டதற்கு, தான் ஒரு கட்சியின் மாநில தலைவர் எனக்கூறி அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சக பயணி ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது...