14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை.. மாமன் மகனுக்கு 20 ஆண்டுகள் சிறை
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, சொந்த அத்தை மகள் என்றும் பாராமல் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


