வங்கியின் முன்பாக தம்பதியினர் தற்கொலை முயற்சி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பரின் 12 லட்சம் ரூபாய் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார். கடன் வாங்கி 5 மாதங்களில் நண்பர் இறந்து விட்டதால் அவரது கடனை தாமோதரன் கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாமோதரனும் அவரது மனைவியும் வங்கியின் முன்பாக தின்னரை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Next Story
