வேளச்சேரி பெட்ரோல் பங்க் விபத்து.. முதல்வரின் உத்தரவு.. வழங்கிய அமைச்சர்
சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயலின் போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, அமைச்சர் சி.வி.கணேசன் தலைமைச் செயலகத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். வேளச்சேரியில் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு உதவி மின் பொறியாளர் ஆர்.ஜெயசீலன் மற்றும் கட்டுமானப் பணியை ஒட்டி அமைந்திருந்த கேஸ் பங்கின் EB Room-ல் இருந்த கேஸ் பங்க் ஊழியர் நரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்... பணியாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் ஜெயசீலன் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சத்து 49 ஆயிரத்து 625 ரூபாயும், நரேஷின் குடும்பத்தாருக்கு 16 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது...