அமெரிக்காவில் மெட்ரோ ரயிலும், பல்கலைக்கழக பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வாட்வே அருகே உள்ள பவுல்வே பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. 150 பயணிகளுடன் சென்ற மெட்ரோ ரயிலும், கல்போர்னியா பல்கலைக்கழக பேருந்தும் மோதிக் கொண்டன. இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.