"கை கோர்ப்போம்" - மேடையிலேயே அழைப்பு விடுத்த துணை முதல்வர் உதயநிதி

Update: 2024-11-03 02:32 GMT

"கை கோர்ப்போம்" - மேடையிலேயே அழைப்பு விடுத்த துணை முதல்வர் உதயநிதி

தமிழ்நாடும், கேரளாவும் பாஜகவிடமிருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்வதால், அதை முறியடிக்க கரம் கோர்ப்போம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடைபெற்ற கலை, இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்ட அவர், சிறப்புரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு மற்றும் கேரளா இடையிலான கலாச்சார, அரசியல் மற்றும் மொழி உறவு தொடர்பான வரலாறு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது என்றும், இலக்கியம், மொழி மற்றும் அரசியல் ஆகியவற்றில் இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறினார்.

இரண்டு மாநில மக்களும், ஏன் என்று கடுமையாக எதிர்த்து நிற்பதால்தான், முற்போக்கு அரசியல் இங்கு வலுவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் தாங்கள் சார்ந்திருக்கும் திராவிட இயக்கம்தான் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில், தமிழ்நாடும், கேரளாவும் பாஜகவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்வதால், அதை முறியடிக்க நாம் கரம் கோர்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்