மொத்தமாக வாயை அடைத்த உதயநிதி.. CMஐ டென்ஷனாக்கிய விவகாரம்... ஸ்டாலின் நெத்தியடி ரிப்ளை
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக வதந்தியைப் பரப்பத் தொடங்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை உதயநிதி அடைத்து விட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
card2
வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், தன் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர்.
card3
ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
card4
அதற்கு அமைச்சர் உதயநிதி, "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்" என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
card5
மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும் என்றும்,
அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.