அ.ம.மு.கவுக்கு வாக்களித்த திருச்சி மற்றும் தேனி தொகுதி மக்களுக்கு, டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். உணவு, தூக்கம் தொலைத்து தன்னலம் கருதாமல் உழைத்த அமமுக தொண்டர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்காலிக தடைகளையும் தாண்டி, லட்சியத்தை அடையும் வரை பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், மக்களுடன் மக்களுக்காக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.