திருவண்ணாமலை கிரிவல பாதையில் திருநங்கைகள் செய்த செயல்.. கலெக்டரே நேரில் பார்த்து அதிரடி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயில் ராஜகோபுர நுழைவாயில் பகுதியில் பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அங்கிருந்த ஆதரவற்ற
முதியோர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களை முதியோர் காப்பகத்தில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் திருநங்கைகளை அழைத்து கோயில் வளாகம் மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களை வழிமறித்து இடையூறு செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.