"பேராசை பெரும் ஆபத்து" - லஞ்சம் வாங்கிய கையோடு சிக்கிய VAO

Update: 2024-08-29 13:34 GMT

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், வாரிசு சான்று வழங்குவதற்காக சதீஷ்குமார் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத சதீஷ்குமார், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில், முதற்கட்டமாக மூன்றாயிரம் ரூபாய் பணத்தை பெற முற்பட்டபோது மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விஏஓ செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றி, தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்