- திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி நம்பெருமாள் தேரில் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண் அதிர முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த சென்றனர்.