திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் அனுமதி இன்றி "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நடிகரும், தொலைக்காட்சி பிரபலமுமான மாகாபா ஆனந்த் உள்ளிட்ட 50பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். உடல்நலனை பேண ஹேப்பி டேஸ் என்ற பெயரில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு, அதனை ஹேப்பி ஸ்ட்ரீட் என விளம்பரப்படுத்தியதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அனுமதி இன்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திடீரென நிகழ்வு ரத்து செய்யப்பட்டதால் வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.