பள்ளி சிறுமிகளுக்கு 6 மாதங்களாக செ*ஸ் டார்ச்சர்...அரசு மருத்துவர் செய்த பெரும் அசிங்கம்

Update: 2024-09-04 11:08 GMT

மருத்துவ சோதனை என்ற பெயரில் அரசு மருத்துவர் ஒருவர் தொடக்கப்பள்ளியில் படிக்கக் கூடிய சிறுமிகளிடம் அத்துமீறிய அதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

தனியார் தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

திருச்சியில் ஏற்கனவே கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்து அடங்கிய நிலையில் ...தற்போது வெளி வந்திருக்கும் தகவல் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

திருச்சி மாநகர டவுன் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி பல வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான சைல்டு லைன் எண்ணிற்கு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாக புகார்

வந்திருக்கிறது

இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பள்ளி சிறுமிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயமேரி உள்ளார். இவரது மகன் சாம்சன் லால்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் பள்ளிக்கென உள்ள விடுதியில் சுமார் 50 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மெடிக்கல் செக்கப் செய்வதாகக் கூறி சாம்சன் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக இரு சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்ததன் புகாரின் பெயரில் அரசு மருத்துவர் சாம்சன் மற்றும் அவரது தாய் கிரேஸ் சகாயமேரி ஆகிய இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சாம்சனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகத் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் விவேகானந்தா சுக்லா யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்து இருக்கிறார்.

தங்களை நல்லவிதத்தில் தொடுகிறார்களா அல்லது தவறான நோக்கத்தில் தொடுகிறார்களா என்பதைக் கூட பிரித்தறிய முடியாத குழந்தைகளிடம் அரசு மருத்துவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்