தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் - மாவட்ட நிர்வாகம் சொன்ன தகவல்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் - மாவட்ட நிர்வாகம் சொன்ன தகவல்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் போக்குவரத்து தொழிலார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 70 சதவித பேருந்துகள் இயக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழக்கையில் பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சேலம் பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருந்த போதிலும் சேலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் செக்காணூரணி போக்குவரத்து பணிமனையிலிருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. பணிமனைகளில் இருந்து பேருந்துகளை எடுத்து செல்ல வந்த தொழிலாளர்களிடம், போராட்டத்தில் பங்கேற்க அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. 95 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.