கண்ணை மறைத்த மகன் பாசம்... கையில் பட்ட ரத்த கறை... மதுரையில் அதிர்ச்சி

Update: 2024-11-06 07:08 GMT

மதுரையில் மகனிடம் மது போதையில் வம்பிழுத்து தாக்கிய இளைஞரை, தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர், கோவையில் இருந்து தீபாவளி விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது உறவினரான ராமர் என்பவரின் 10 வயது மகனை, விஜய் மது போதையில் வம்பிழுத்து தகராறு செய்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவன், வீட்டுக்குச் சென்று தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளான். இதையறிந்த ஆத்திரமடைந்த ராமர், விஜயிடம் சென்று கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ராமர் பீரோவுக்கு அடியில் வைக்கும் கல்லால் தாக்கியதில், விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ராமரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்