சபரிமலையில் பதினெட்டாம் படியேறும் பக்தர்களுக்கு உதவ அனுபவமிக்க போலீசாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 16ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு இந்த சமயத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்த சீசனில் அது போன்று நடக்காமல் இருப்பதற்காக
ஏற்கனவே சபரிமலையில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ள போலீசாரை மட்டும் பக்தர்களை படியேற்றும் பணியில் ஈடுபடுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.