ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பெண்.. ஈசல் போல கிளம்பி வந்த போன்கள்.. பெண்களே.. உஷார்..

Update: 2024-11-06 07:41 GMT

ஆன்லைனில் பீட்ஸா ஆர்டர் செய்த பெண்ணின் செல்போன் எண்ணை பயன்படுத்தி டார்ச்சர் செய்த ரோமியோவை போலீசார் கண்டுபிடித்து தங்கள் பாணியில் எச்சரித்து விட்டிருக்கிறார்கள்..

ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவது, உணவு உண்பது என உட்கார்ந்த இடத்தில் அனைத்தையும் வரவைக்கும் இக்கால இளைஞர்கள், அதில் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தாராளமாக பதிவிடுகின்றனர்..

அப்படி ஆன்லைனில் தகவல் பதிவிட்ட பெண்ணிற்கு நேர்ந்த நிலை...இளம்பெண்களை மட்டுமின்றி பலரையும் உஷார் ஆக்கியிருக்கிறது..

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே பிரபல உணவுக் கடையில், இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அப்போது அதில் தனது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டியிருந்ததால், தனது எண்ணை பதிவு செய்துள்ளார். பின்னர் ஆர்டர் செய்த பீட்சாவை சாப்பிட்டு முடித்த பின்னர், சில மணி நேரத்திற்கு பிறகு அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது...

அதில் பேசிய இளைஞர், உங்களை பார்க்க வேண்டும், பேச வேண்டும் எனக் கூறி இருக்கிறார். உடனே அழைப்பை துண்டித்து ப்ளாக் செய்தாலும் தொடர்ந்து மற்றொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்துள்ளது. பின்னர் சுதாரித்துக் கொண்ட அந்த இளம்பெண், பீட்சா ஆர்டர் செய்த கடையில் இருந்த யாரோ தனக்கு டார்ச்சர் கொடுப்பதை அறிந்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்