நண்டு சூப்பால் நடந்த விபரீதம்... பேருந்தில் அலறி துடித்த பயணிகள்

Update: 2024-01-27 08:58 GMT

ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில், அடையாளம் தெரியாத நபர் விற்பனைக்காக சூடான நண்டு சூப்பை கேனில் எடுத்து சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் கொத்தாம்பாடி அருகே வந்தபோது பாதுகாப்பு பேரிகார்டு பகுதியில் பேருந்து வளைந்த நிலையில், பேருந்தில் இருந்த நண்டு சூப் கீழே ஊற்றியுள்ளது. இதில் நடத்துநர் மற்றும் நான்கு பயணிகள் மீது சிதறியதில் சூடு தாங்க முடியாமல் அவர்கள் கதறியுள்ளனர். உடனடியாக ஓட்டுநர் பேருந்தை மருத்துவமனை நோக்கி இயக்கி அவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்