கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்... மகிழ்ச்சியை தேடி வந்து நிம்மதியை இழக்கும் சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், கொடைக்கானல் நகர்ப்பகுதிகள், பிரதான மலைச்சாலைகள், மலைக்கிராமங்களுக்கு செல்ல கூடிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரவு நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் நீடித்ததால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதே நேரத்தில், ஏராளமான வாகனங்கள் குவிந்ததால், வாகன வெளிச்சத்தில் கொடைக்கானல் நகரம் வழக்கத்தை விட அதிகமாக ஒளிர்ந்து காணப்பட்டது