Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-20 08:15 GMT
  • மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக, மக்களவையில் விவாதம் துவங்கியது....
  • இன்றே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனவும் தகவல்...
  • மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக நாடாளுமன்றத்தில் சோனியாகாந்தி அறிவிப்பு...
  • உள்ளாட்சி அமைப்புகளில் முதன் முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எனவும் பெருமிதம்...
  • மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சோனியா காந்தி வலியுறுத்தல்...
  • இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை...
  • மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தேர்தல் நேரத்தில் பாஜக அரசு கொண்டு வந்தது ஏமாற்று வேலை என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
  • வேளாண் சட்டம், சிஏஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட சட்டங்களில் காட்டிய அக்கறையில் ஒரு சதவீதம் கூட மகளிர் மசோதாவில் 9 ஆண்டுகளாக அக்கறை காட்டாதது ஏன் எனவும் கேள்வி...சீமானுக்கு எதிரான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்?.....
  • வரும் 26ம் தேதி விளக்கமளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....
Tags:    

மேலும் செய்திகள்