Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-15 08:20 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைப்பது, எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பேறு என முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி...

எதிர்காலத்தில் பெண்களுக்கான திட்டங்கள் துவங்கும்போதெல்லாம் தனது பெயரும் பேசப்படும் எனவும் பெருமிதம்...நிதி நிலைமை சரியானதும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...

2 ஆண்டு தாமதமானதும், இந்த திட்டம் பற்றி எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பியதாகவும் குற்றச்சாட்டு...மதத்தின் பெயரால் குழந்தை திருமணங்களை ஆதரித்து பேசும் பிற்போக்குவாதிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை...

ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு விடுதலையை பெற்றுத் தந்ததுதான் திராவிட மாடல் எனவும் பேச்சு...ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியன்று, வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் ஐஏஎஸ் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்